பழனிசாமியை 2 முறை சந்தித்தேன்; அவர் எதுவுமே நடக்கவில்லை என்பது போல பேசுகிறார் கிருஷ்ணசாமி

 
;

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பழனிசாமியை 2 முறை சந்தித்தாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள 43 வேட்பாளர்களை அறிவித்தார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி. ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ண்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூர், நெல்லை ஆகிய தொகுதிகளில் அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமி போட்டியிடவுள்ளதாக அறிவித்தார். அதிமுகவுடன் கூட்டணி உடன்பாடு எட்டப்படாத நிலையில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடவுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, “அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பழனிசாமியை 2 முறை சந்தித்தேன். ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்பது எடப்பாடி பழனிசாமிக்குதான தெரியும்.என்ன காரணத்தினாலோ இபிஎஸ் எதுவுமே நடக்கவில்லை என்பது போல பேசுகிறார். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும். கன்னியாகுமரியில் 4% வாக்குதான் அதிமுக பெற்றது. 9 தொகுதிகளில் அதிமுகவுக்கு டெபாசிட் இல்லை.” என்றார்.