“ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடனே கூட்டணி”- கிருஷ்ணசாமி
Feb 10, 2026, 20:33 IST1770735836075
ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தேவகோட்டையில் நடைபெற்ற மாவட்ட செயல் வீரர் கூட்டத்தில் பேசிய கிருஷ்ணசாமி, “தேர்தல் தேதி அறிவிப்பு வரை காத்திருப்போம். ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடனே கூட்டணி அமைப்போம். திமுக, அதிமுக கட்சிகளின் தலைமை கூட்டணி ஆட்சி இல்லை என்று உறுதியாக அறிவிக்கவில்லை. கூட்டணி அமைத்து வெற்றி பெற்றபின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பது ஜனநாயகமாக இருக்காது” என்றார்.


