தமிழகத்திற்கு ஆட்சி மாற்றமே தேவை அமைச்சரவையில் மாற்றமல்ல- கிருஷ்ணசாமி

 
krishnasamy

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இலாகா மாற்றம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்..

அதன்படி, டி.ஆர்.பி.ராஜாவுக்கு  தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனித வள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கும், அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல்  தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “தமிழக அமைச்சரவையில் மாற்றம் என்பது பொதுமக்களுக்கு பயனில்லாத ஒன்று. ஆட்சி மாற்றம் தேவையே தவிர அமைச்சரவையில் மாற்றம் தேவையில்லை. திமுக ஆட்சிக்கு அதிகபடியான கமிஷன்களை பெற்று தருகிறவர்களையே தேர்ந்தெடுத்து அமைச்சராக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.திராவிட மாடல் என்று பேசுகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.

https://twitter.com/DrKrishnasamy/status/1656302622650036224

அண்மையில் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்தார் என்பது குறிப்பிடதக்கது.