இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும்!

 
tn

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கு, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  ஓவியம் மூலம் நன்றி தெரிவித்தனர்.

stalin

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு  வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.  அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. இத்தகைய திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது.2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்தக் கட்டமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தினார் முதல்வர் ஸ்டாலின். 


இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கு, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  ஓவியம் மூலம் நன்றி தெரிவித்தனர். இதைக்கண்ட முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் , இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும்! அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.