#BREAKING தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்
Jan 25, 2026, 15:41 IST1769335862286
அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்துள்ளார்.
முன்னாள் அதிமுக வேளாண் அமைச்சரான கு.பா. கிருஷ்ணன், மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்துவந்தவர் கு.ப.கிருஷ்ணன். மேலும் 1991 முதல் 1996 வரையிலான முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் கு. ப. கிருஷ்ணன் (Ku. Pa. Krishnan) விவசாயத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். நாளைக்கு தேர்தல் வைத்தாலும் தவெக வெற்றி பெறும் என ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த கு.ப.கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.


