“விஜய் உடன் கூட்டணி சேர எந்த முயற்சியும் நாங்கள் எடுக்கவில்லை”- கிருஷ்ணசாமி

 
“விஜய் உடன் கூட்டணி சேர எந்த முயற்சியும் நாங்கள் எடுக்கவில்லை”- கிருஷ்ணசாமி

கூட்டணியை பொறுத்தவரை மதுரையில் நடக்கும் மாநாட்டிற்கு பிறகு தான் அறிவிக்க முடியும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

ச்


நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, “தென் தமிழகம் பல்வேறு துறைகளில் இன்னும் மேற்கு மாவட்டங்களுக்கு நிகராகவோ அல்லது சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களுக்கு நிகராகவோ வளர்ச்சி அடையவில்லை. திருநெல்வேலியில் கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் அண்மை காலமாக தொழிற்சாலைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. தூத்துக்குடியில், திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வந்து வறட்சியில் இருக்கின்ற காரணத்தினால் இங்கு இருக்கக்கூடிய இளைஞர்களில் வேலை வாய்ப்புக்காக திருப்பூருக்கும் கோயம்புத்தூருக்கும் சென்னைக்கும் பிற மாநிலங்களுக்கும் இடம்பெயர்கிறார்கள். தூத்துக்குடியில் அண்மையில் திறக்கப்பட்ட நிறுவனத்தில் 400 க்கும் மேற்பட்டவர்கள் டிப்ளமோ படித்தவர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அங்கே உள்ளூரில் வாழக்கூடிய தேவேந்திரகுல சமுதாயத்தை சார்ந்தவர்களுடைய நிலம் தான் பெரும்பாலான அந்த கம்பெனிக்கு எடுக்கப்பட்டிருக்கிறது அவர்களுக்கு அங்கே வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை.


வடமாநில தொழிலாளர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுபோன்ற தொழிற்சாலைகளில் 50 சதவீதத்திலிருந்து 70% உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று முதல் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் வைத்திருக்கிறோம். அடுத்த கட்டமாக கங்கைகொண்டானிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.இன்னும் பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடைபெறுவதாக தெரிகிறது. தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் யாருக்கும் நெருக்கடியை ஏற்படுத்த செய்வதில்லை. அதை வாக்காக மாற்றுவது அவருடைய திறமை. நல்ல நண்பர்களை அவர்  சேர்க்க வேண்டும்.கிராமங்களில் பொருளாதார ஏற்ற தாழ்வு அதிகமாக உள்ளது.மக்கள் வறுமையின் உச்சத்தில் இருக்கிறார்கள். கூட்டணியை பொறுத்தவரை மதுரையில் நடக்கும் மாநாட்டிற்கு பிறகு தான் அறிவிக்க முடியும்.2026 ல் யாருமே வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டோம் என கட்சிகள் உறுதி கொடுக்க வேண்டும். விஜய் தரப்பில் இருந்து கூட்டணிக்கு எந்தா அழைப்பும் வரவில்லை. நாங்களும் முயற்சி எடுக்கவில்லை. 2026 ல் புதிய தமிழகம் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு. இது தான் எங்கள் கோட்பாடு. ஜனவரிக்கு பிறகு தான் முடிவு சொல்ல முடியும். 2026 க்கு பிறகு தமிழகத்தில் மதுக்கடைகள் இருக்காது” எனக் கூறினார்.