வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் - 3 பேர் கைது!

 
tn

கிருஷ்ணகிரி அருகே 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கட்டாய திருமணம் செய்த விவகாரத்தில் தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்துவைக்க அவரது தாய் முடிவு செய்துள்ளார். இதனையறிந்த அந்த சிறுமி, தனது பாட்டி வீட்டிற்கு தப்பியோடியுள்ளார். இந்த நிலையில், இதனையறிந்த மணமகன் மாதேஷ் சிறுமியை பாட்டி வீட்டிற்கு சென்று வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி கதறி அழுத வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது. 

இந்த நிலையில்,  14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கட்டாய திருமணம் செய்த விவகாரத்தில் தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டாய திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய், சிறுமிக்கு தாலி கட்டி அழைத்துச் சென்றவர்,  அவரது சகோதரர் ஆகியோரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். காளிக்குட்டையைச் சேர்ந்த மணமகன் மாதேஷ், அவரது சகோதரர் மல்லேஷ், சிறுமியின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.