“சினிமாவில் நடித்ததை வைத்துக்கொண்டு..." - விஜய்யை சாடிய கே.பி.முனுசாமி

 
kp munusamy

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள தலிஅள்ளி கிராமத்தில் அதிமுகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசினார். 

kp munusamy


கூட்டத்தில் உரையாற்றிய கே.பி. முனுசாமி, 2026ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்த தேர்தல் ஆகும். இதுவரையில் நடந்த தேர்தல் அனைத்திலும் திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி நிலவி வந்தது. ஆனால் தற்போது நடைபெறும் தேர்தலில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. எப்படியென்றால் அதிமுக - திமுக இரு கட்சிகளிலுமே செல்வாக்கு மிக்க தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களும் மறைந்து விட்டனர். இப்படியான சூழ்நிலையில் அவர்களின் புகழை வைத்து நாம் வரக்கூடிய 2026 தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் புதிய புதிய கட்சிகளும் உருவாகி மாய பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வெளியே மக்களை சந்திப்பதில்லை, மக்களோடு நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்வதில்லை, ஏதோ சினிமாவில் நடித்தார்கள் அந்த புகழை வைத்துக்கொண்டு ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டு அவர்களும் தேர்தல் களத்தில் வந்து நிற்கிறார்கள் என மறைமுகமாக தவெக-வை சாடினார். இந்த சூழ்நிலையில் தான் நாம் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இந்த தேர்தலில் நாம் விழிப்போடு இருக்க வேண்டும் என்றார்.