“விஜயின் தவெக உள்பட பலருடனும் தொடர்பு இருப்பது அரசியலில் சாதாரணம்”- கிரிஷ் ஜோடங்கர்
தேர்தல் காலங்களில் கட்சிகள் இடையே தொடர்பு வைத்திருப்பது இயல்பான ஒன்று, நடிகர் விஜயின் தவெக உள்பட பலருடனும் தொடர்பு இருப்பது அரசியலில் சாதாரணம் என தமிழ்நாடு காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேச காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “திமுக தனது கூட்டணிக் கட்சிகளைத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கத் தொடங்கியுள்ளது அவர்கள் இன்னும் எங்களை அழைக்கவில்லை. பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை தொடங்கும் போது அதை உங்களுக்குத் தெரிவிக்கிறோம். அப்போதுதான் நாங்கள் என்ன கேட்கிறோம், அவர்கள் என்ன தருகிறார்கள் என்பதைப் பற்றி எங்களால் விளக்கமாகச் சொல்ல முடியும். சுமூகமான ஒருங்கிணைப்பிற்காக இத்தகைய சந்திப்புகள் பொதுவாக நடக்கும். எதிர்பார்ப்புகள் மற்றும் அவை எந்த அளவிற்குச் செல்லும் என்பது குறித்து விவாதித்திருக்கலாம். அவர் எங்கள் தலைவர்களுடனும் தொடர்பில் இருக்கிறார், எங்களுடைய விருப்பங்கள் குறித்தும் அவரிடம் விவாதித்தோம்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. எங்களது பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால், மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுக்கள் இன்னும் முடிவடையவில்லை, அது தொடரும். பஞ்சாயத்து, உள்ளாட்சி மற்றும் மாநகராட்சி அளவில் அதிகாரப் பகிர்வு குறித்து அவர்கள் விவாதித்தனர். எங்களுடைய முக்கிய நிபந்தனை தொகுதிகள் குறித்ததுதான், எங்கள் குழுக்கள் சந்தித்த பிறகு அது குறித்துத் தெரிவிக்க முடியும். வேணுகோபால் அவர்கள் முதல்வரைச் சந்தித்தபோது அவர்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கொள்கை அளவில், அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எந்த அரசியல் கட்சி அதிகாரத்தை வேண்டாம் என்று சொல்லும்? நாங்கள் ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறோம், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை (NGO) அல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த விருப்பங்கள் உள்ளன. தமிழகத்தில் அத்தகைய கலாச்சாரம் இல்லை என்று முதல்வர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் லட்சியங்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நான் கேள்விப்படுவது என்னவென்றால், அவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் குறிப்பாக இளைஞர்களிடையே செல்வாக்கு பெற்று வருகிறார்கள் என்பதுதான். அது (TVK-வின் தேர்தல் தாக்கம்) எங்களது கவலைக்குரிய விஷயம்.
கேள்வி: விஜய்யின் கட்சியுடன் காங்கிரஸ் தொடர்பில் இருப்பதாக ஊகங்கள் உள்ளன. டிவிிகே-வுடன் (TVK) கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் ஆராய்ந்ததா?
பதில்: டிவிிகே எங்களை வெளிப்படையாக அழைத்து, எங்களுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. அதாவது அவர்கள் எங்களது அடிமட்ட பலத்தை அங்கீகரித்துள்ளனர். அரசியலில் அனைவரிடமும் பேச வேண்டும். தகவல் தொடர்பு ஒருபோதும் நின்றுவிடாது. பரம எதிரிகள் கூட பேசிக் கொள்வார்கள்” என்றார்.
`

