“சாகும்வரை உதவுவதை நிறுத்த மாட்டேன்” - KPY பாலா

 
ச்

நான் செய்துவரும் உதவியை சாகும் வரை நிறுத்த மாட்டேன் என நடிகர் KPY பாலா கூறியுள்ளார்.

Image

தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா, தற்போது சினிமாவிலும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ், சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். அந்தவகையில் நடிகர் பாலா இன்று சென்னையில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது அங்கு அவரை காண்பதற்காக வந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை சந்தித்த பாலா, அவருக்கு பண உதவி செய்து அனுப்பிவைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த KPY பாலா, “நான் செய்துவரும் உதவியை சாகும் வரை நிறுத்த மாட்டேன். என்னுடைய வேலையே என்னிடம் இருப்பதை கடைசி வரை கொடுத்துக்கொண்டே இருப்பதுதான். அது தொடர்ந்துகொண்டே இருக்கும். முடிவே இல்லை. என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கம் கொடுப்பேன்.