உதவி கேட்ட தாய் - கையில் இருந்த பணத்தை அள்ளிக்கொடுத்த kpy பாலா

 
tn

விஜயகாந்த் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய்க்கு கையில் இருந்த பணத்தை அள்ளிக்கொடுத்த kpy பாலாவின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

tn

kpy பாலாவுக்கு 15 ஆம் ஆண்டு நார்வே சினிமா விருது விழா நிகழ்ச்சியில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வாங்கிய kpy பாலா விஜயகாந்த் நினைவிடத்தில் விருதினை வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார்.

tn

அப்போது 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த வசதி இல்லை என அவரது அம்மா கண்ணீருடன் வந்து நிற்க தனது பாக்கெட்டில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து கொடுத்தார். 

A post shared by Balan Akassh Balaiyan Jaganathan (@bjbala_kpy)

கையில் உள்ள மொத்த பணத்தையும் அப்படியே கொடுத்துட்டீங்களே என அம்மா உருக்கத்துடன் கூற, படிக்கத் தானே கேக்குறீங்க எடுத்துக்கோங்க என்று கூறிய பாலாவின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.