“எந்த கட்சி ஆட்சிக்கு வருமென்று பார்த்து அங்கு போயிடுவார்..”- கே.பி.முனுசாமி

 
munusamy

முதலமைச்சர் விஜயின் நம்பிக்கையைப் பெற  திமுக, அதிமுக இணைப்பு முயற்சி என நிர்மல்குமார் பேசி வருகிறார் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “நிர்மல்குமார் பல கட்சிகளுக்கு ஓடிக்கிட்டு இருந்தார். ஏற்கனவே இருந்த கட்சியை விமர்சித்து பேசுனாதான் இந்தக் கட்சித் தலைவர் நம்பள நம்புவார்னு பேசிக்கிட்டிருக்கார். எந்த கட்சி ஆட்சிக்கு வருமென்று பார்த்து அங்கு போயிடுவார். ஏற்கனவே அவர் இருந்த அ.தி.மு.கவை விமர்சித்தால் தான் விஜய் தன்னை நம்புவார் என அவர் பேசிக்கொண்டிருக்கிறார். தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ.க இணைந்து ஆட்சி அமைக்க இன்னமும் முயற்சி நடக்கிறது என அவர் பேசினால் அதற்கு நாம் என்ன பண்ண முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.