கே.பி. அன்பழகன் மருமகள் உயிரிழப்பு - ஈபிஎஸ் இரங்கல்

 
ep

அதிமுக முன்னாள் அமைச்சர் கே .பி அன்பழகன் மருமகள் மரணமடைந்த நிலையில் ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. K.P. அன்பழகன், M.L.A., அவர்களுடைய மருமகள் திருமதி S. பூர்ணிமா அவர்களுக்கு எதிர்பாராத விதமாக தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

tn
பாசமிகு மருமகளை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் சகோதரர் திரு. அன்பழகன் அவர்களுக்கும்; மனைவியை இழந்து ஆற்றொணாத் துயரத்தில் வாடும், திரு. அன்பழகன் அவர்களுடைய இளைய மகன் திரு. A. சசிமோகன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், திருமதி பூர்ணிமா அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.