"கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகி அல்ல"- கோவி. செழியன்
Dec 25, 2024, 22:23 IST1735145582235
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகி அல்ல என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கோவி. செழியன் பதிலளித்துள்ளார்.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் திமுக நிர்வாகி என்பது உண்மையல்ல, எது நடந்தாலும் திமுகவை குறை கூறுவது அண்ணாமலையின் இயல்பான குணம். அண்ணாமலை கூறுவதால் அது அரசியலமைப்பு சடத்தில் உள்ளது என்று அர்த்தமல்ல, அது உண்மையும் அல்ல என அண்ணாமலைக்கு அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.