‘ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்’ -அமைச்சர் கோவி.செழியன்

 
ச் ச்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை நடுவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோவி. செழியன், “தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத விஜய் புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்பது கூரையேறி கோழி பிடிக்காதவர், வானதில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன் என்பது போல... விஜய் முதலில் தேர்தலில் நிற்கட்டும். சில இடங்களில் வெற்றி பெறட்டும், அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்படும். பிறகு புதுச்சேரி போகட்டும். ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய்.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயிகள் அறுவடை  செய்யும் நெல்லை   மழை காலத்திலும்  பாதுகாப்பாக சேமித்திட  56 ஏக்கர் பரப்பில் 170 கோடி ரூபாய் நிதியில் மாபெரும் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்திட முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார் மிக சிறப்பான திட்டம்” என்றார்.