‘காவல் உதவி’ செயலியை மாணவிகள் உடனே பதிவிறக்கம் செய்க- அமைச்சர் கோவி.செழியன்

 
s

மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னேறிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை உயர்கல்வியில் தமிழகம் பெற வேண்டும்:  அமைச்சர் கோவி. செழியன் | Higher Education Minister Kovi Chezhiyan praised  about tn cm ...

இதுதொடர்பாக அமைச்சர் கோவி. செழியன் தனது எக்ஸ் தளத்தில், “பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும்  ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 


அவசர காலங்களில் சிவப்பு நிற `அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும். மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இச்செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.