‘ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல்.. சிங்கம் சிங்கிளாக தான் வரும்’ - கோவை செல்வராஜ்

 
 ‘ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல்..  சிங்கம் சிங்கிளாக தான் வரும்’  - கோவை செல்வராஜ்


தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.  

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும்  பணி நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளது.   இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு  அனைத்து   தலைமை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவிட்டார்.  அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.   

 ‘ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல்..  சிங்கம் சிங்கிளாக தான் வரும்’  - கோவை செல்வராஜ்

இதில்  ஈபிஎஸ் தரப்பில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றனர்.   அதேபோல் பன்னீர்செல்வம்  தரப்பில் கோவை செல்வராஜ் பங்கேற்றார்.  கூட்டத்திற்கு முதலில் கோவை செல்வராஜே வந்திருந்தார்.  அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்பாக அதிமுக பெயர் பலகை இருந்தது.   இதனையடுத்து வந்த ஜெயக்குமார், அந்த பெயர் பலலையை எடுத்து தன்பக்கம் வைத்துக்கொண்டார். பின்னர் 3 பேரும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.  பெயர் பலகையை எடுத்து  வைத்தபோது ஓபிஎஸ் ஆதரவாளர், எந்த எதிர்ப்பும் இன்றி அமைதி காத்தார்.  

 ‘ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல்..  சிங்கம் சிங்கிளாக தான் வரும்’  - கோவை செல்வராஜ்

இந்நிலையில் கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ்,  “ ஜெயக்குமார்  பலகையை நகர்த்தி வைத்ததார்.  தரம் இல்லாத செயல்களை செய்பவர்களை தரமான மனிதர் கண்டுகொள்ள மாட்டார்கள்.   இது ஒரு கேவலமான செயல் .  ஒரு அமைச்சராகவும் ,  எம்எல்ஏவாக இருந்தவர் இதுபோன்ற செயல்களை செய்வது கேவலமாக இல்லையா..?? நீங்கள் ( ஜெயக்குமார் ) அதிமுகவா முதலில், இல்லையே.. !!  அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ( ஓபிஎஸ்) தான் கட்சியை நடத்துகிறார்” என்றார்.  மேலும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நீங்கள் ஒருவர் மட்டுமே வந்துள்ளீர்களே என்ற கேள்விக்கு, “சிங்கம் சிங்கிளாக தான் வரும். அண்ணன் அனுப்புகிற ஒரு ஆள் போதும் இதுபோன்றவர்களை  அடக்கி விடடலாம் “ என்று தெரிவித்தார்.