கொடநாடு கொலை வழக்கு- கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு சிபிசிஐடி சம்மன்

 
மறுவிசாரணையில் சயான் – தனபால் அளித்த வாக்குமூலம் – 60 பக்க அறிக்கையை தயார் செய்த காவல்துறை

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் தனபாலிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில்  எடப்பாடி பழனிச்சாமியை  விசாரிக்க வேண்டும் எனவும் , எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பெயரில் தான் கோடநாட்டில் இருந்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது.  எனவே அவரிடம் விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் தனபால்  வலியுறுத்தி வந்தார்.  மேலும் இந்த வழக்கில்  இரண்டு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி , வேலுமணி  மற்றும் இளங்கோவன்  , எடப்பாடி பழனிச்சாமியின் மைத்துனர் வெங்கடேசன் ஆகியோருக்கும்,  அவர்களுக்கு  கீழ் 35 பேரும்  சம்பந்தப்பட்டுள்ளனர்.  

கொடநாடு மர்ம மரணங்கள்: வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு

இது தொடர்பான விவரங்கள் அனைத்தும் தனக்குத் தெரியும் , எனவே தன்னை சிபிசிஐடி  போலீசார் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தார் . இந்த நிலையில் கோவை சிபிசிஐடி போலீசார் இன்று தனபாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் வரும் 14-ஆம் தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தனபாலுக்கு  அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது. இதனால்  இந்த வழக்கு விசாரணை மேலும் துரிதமடையும். இதனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதால் , கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு பரபரப்பு அடைந்துள்ளது.