கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் நேரு

 
கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் நேரு

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் K.N.நேரு மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் - பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று காலை சந்தித்தனர். அப்போது கமல்ஹாசனின் மாமா அமரர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ஆறுதல் கூறினர். 

Image

அத்துடன், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு முழுக்கப் பயணம் மேற்கொண்டு திமுக தலைமையிலான கூட்டணிக்குப் பரப்புரை செய்தமைக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டனர். இவர்களோடு, K.N.நேருவின் சகோதரரும் உடனிருந்தார்.