திருச்சி மேற்கில் கே.என்.நேரு பின்னடைவு!

 
nehru

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், திருச்சி கிழக்கில் விஜய் பின்னடைவை சந்தித்துள்ளார். எடப்பாடி தொகுதியில் இ.பி.எஸ் முன்னிலையில் உள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதியில்அமைச்சர் கே.என். நேரு பின்னடைவை சந்தித்துள்ளார். 584 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி முன்னிலையில் உள்ளார். திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் முன்னிலையில் உள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்ட விஜய் பின்னடைவை சந்தித்துள்ளார். 


இதேபோல் தி.நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் முதல் சுற்றில் 738 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை பின்னடைவை சந்தித்துள்ளார். திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் உள்ளார்.