"நான் உங்களுடனேயே வந்துவிடுகிறேன் என்று சொன்னவர்தான் துரை வைகோ"- கே.என்.நேரு
Sep 17, 2026, 15:52 IST1789640533313
பாஜகவின் ஆதரவு கட்சி தான் திமுக என மதிமுக எம்பி துரை வைகோ பேசியதற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, “துரை வைகோ பற்றி பேச விரும்பவில்லை. எங்க அப்பா கோபக்காரர். என்னால் தனியாகக் கட்சி நடத்த முடியாது. நான் உங்களுடனேயே வந்துவிடுகிறேன் என்று சொன்னவர்தான் துரை வைகோ. சின்னப் பிள்ளையாக இருந்து கொண்டு மிக அதிகமாகப் பேசுகிறார். ஸ்டாலின் குறித்தெல்லாம் அவர் பேசலாமா? தவெக கூட்டணியில் இருப்பவர்கள்தான் பாஜகவுடன் மறைமுகமாக உறவில் உள்ளனர். 1000 ரூபாய் மின்கட்டணம் கட்டியவர்கள் எல்லாம் 5000 ரூபாய் கட்டுகிறார்கள். அவ்வளவு கட்டியும் அடிக்கடி மின்வெட்டு தான் ஏற்படுகிறது.

