“எந்த முறைகேடும் நடக்கவில்லை”- கே.என்.நேரு

 
அச் அச்

நகராட்சி நிர்வாகத்துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணியில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. ஒவ்வொரு பணியிடத்திற்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்த லஞ்ச விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு பெயரும், அவரது சகோதரர் ரவிச்சந்திரன் பெயரும் அதிகளவில் அடிப்படுவதாக சொல்லப்பட்டது.

இதுதொடர்பான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, “நகராட்சி நிர்வாகத்துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்துறையில் வெளிப்படையாக ஒளிவு மறைவற்ற முறையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கை தூசி தட்டி எடுத்து களங்கம் கற்பிக்க அமலாக்கத்துறை முயற்சிக்கிறது” எனக் கூறியுள்ளார்.