தனது பிறந்த நாளையொட்டி முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கே.என்.நேரு!

 
kn nehru kn nehru

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். 

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (9.11.2024) முகாம் அலுவலகத்தில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருண் நேரு அவர்கள் உள்ளார்.

kn nehru

இதேபோல், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று (9.11.2024) முகாம் அலுவலகத்தில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தனது பிறந்த நாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.