’காது மற்றும் கழுத்தில் நகை அணிந்துவந்தால் ரூ.1,000 எப்படி கிடைக்கும்?’- அமைச்சர் அடாவடி

 
’காது மற்றும் கழுத்தில் நகை அணிந்துவந்தால் ரூ.1,000 எப்படி கிடைக்கும்?’- அமைச்சர் அடாவடி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண்கள், சிலர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ரமச்சந்திரனிடம், தங்களுக்கு இன்னும் மகளிர் உரிமை தொகை 1000 வரவில்லை என்று குற்றம் சாட்டியபோது, அந்தப் பெண்களை அவர் ஒருமையில் பேசிய வீடியோ வைரலாகிவருகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ரமச்சந்திரனிடம், தனக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று மூதாட்டி ஒருவர் முறையிட்டுள்ளார். அப்போது, ’காது மற்றும் கழுத்தில் நகை அணிந்துவந்தால் எப்படி கிடைக்கும்’ என்று அமைச்சர் கிண்டல் செய்தார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், அமைச்சர் திரு.ராமச்சந்திரன் பொதுவெளியில் பெண்களை அவதூறு செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர்கள், பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, தற்போது காது, மூக்கில் நகை அணிந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கிடையாது என அமைச்சரின் மூலம் அறிவித்திருப்பது ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, தன்னிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்த பெண் ஒருவரிடம், அம்மனுவை வாங்கி அவரின் தலையிலேயே அடித்த புகாருக்குள்ளான அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மகளிர் உரிமைத் தொகை கேட்டு வந்த பெண்களைத் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.