ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்

 
கிரண்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர், தலைமையுடன் மோதல் போக்குடன் இருந்து வருகின்றனர். அதேநேரம்  காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் கட்சித் தலைவராக வர வேண்டுமென சில மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.  இந்தச்சூழலில்  கட்சியின் மூத்த தலைர்கள் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து விலகிவருகின்றனர். 

Image

குறிப்பாக குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் கே. அந்தோனி, எம்.ஏ.கான் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். தலைவர் கட்சியில் இருந்து விலகியிருப்பது, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த கிரண் குமார் ரெட்டி, ஆந்திர சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

தனி தெலங்கானா மாநில பிரிவினைக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல்வராக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்தவர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி. தெலங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு சமக்கிய ஆந்திரா ( ஒருங்கிணைந்த ஆந்திரா என்ற  ) கட்சி தொடங்கி ஆந்திர மாநிலம் முழுவதும் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தேல்வி அடைந்தார். அதன் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால் கட்சி செயல்பாடுகளில் எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். ராகுல்காந்தியின்ன்பாரத் ஒற்றுமை யாத்திரையில் ஆந்திரா, தெலங்கானாவில் பயணம் செய்யும் போது அதில் கிரண்குமார் பங்கேற்கவில்லை. சுமார் 9 ஆண்டுகளுக்கு மேலாக 2014 ஆண்டு முதல் அரசியல் ஈடுப்பட்டில் இருந்து தூரமாக இருந்து வந்தார். இந்நிலையில்  கடந்த சில தினங்களாக  கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அக்கட்சி தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.