கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பெயர் மாற்றமா? - தமிழக அரசு விளக்கம்

 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பெயர் மாற்றம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பெயரை மாற்றம் செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது.



கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் பண்டிதர் அயோத்திதாசர் நவீன பேருந்து நிலையம் என்று மாறுகிறது என சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றம் செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவும் தகவல் தவறானது" என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA ) தெரிவித்துள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர் ! என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.