மோடியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கிய குஷ்பு - சுந்தர்.சி

 
ச்

மகள் திருமணத்திற்காக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர் குஷ்பு மற்றும் சுந்தர்.சி தம்பதியினர்.

படம்

பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, மும்பையில் நடுத்தர முஸ்லிம் குடும்பத்தில் நக்கத் கான் என்ற இயற்பெயருடன் பிறந்தார். பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சுந்தர்.சி என்பவரை 2000-ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு அவந்திகா (மூத்த மகள்), அனந்திதா (இளைய மகள்) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, தற்போது தீவிர அரசியலிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் குஷ்பு - சுந்தர்.சி தம்பதி, தனது மூத்த மகள் அவந்திகா திருமணத்திற்காக  பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.


இந்த தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு, “இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களைச் சந்திக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. பிரதமர் நரேந்திரமோடி இன்று டெல்லியில் இருந்தார். அப்போது நானும் என் கணவர் திரு. சுந்தர் சி அவர்களும், எங்கள் மகளின் வரவிருக்கும் திருமணத்திற்காக அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கினோம். மோடி எங்களை மனமுவந்து வாழ்த்தினார். தனது பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கிய அவருக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் அவருக்கு மிகவும் கடமைப்பட்டவர்களாகவும், பணிவுடனும் உணர்கிறோம். நன்றி பிரதமர் ஜி” எனக் குறிப்பிட்டுள்ளர்