குஷ்பு அக்கா நீங்க பீனிக்ஸ் பறவை! அந்த அதிர்ச்சியில் இருந்து இந்த நிலைக்கு வந்தது உத்வேகம் - நெகிழும் அண்ணாமலை

 
khu

குஷ்புவுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்தான் இன்று பெரும்பாலான ஊடகங்களில் விவாத பொருளாகி இருக்கிறது.  இந்த மாதிரி சிக்கல் எல்லாம் இருந்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து மேலே வந்திருக்கும் குஷ்புவை பார்த்து வியக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.  சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து வந்த பீனிக்ஸ் பறவை என்று நெகிழ்கிறார்.   

 நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சமூக ஈடுபாடு,  அரசியலிலும் தீவிரமாக பயணித்து வருகிறார் குஷ்பு. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர்,  தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்று தீவிரமாக இயங்கி வருகிறார்.

kk

 இவர் பத்திரிக்கையாளர் பர்க்கா தத்  உடனான பெண் மைய உரையாடலில் பங்கேற்று பேசியபோது,  தனது சிறுவயது  துயரத்தை மீடூவாக வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆணோ பெண்ணோ குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள்.   பின்னர் வாழ்க்கை முழுவதும் அந்த பாதிப்பு இருக்கும்.  எட்டு வயது சிறுமியாக இருந்தபோது நானும் பெற்ற தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்.   மனைவியை அடிப்பதும் ஒரே மகளிடம் தவறாக நடந்து கொள்வதும் பிறப்புரிமை என்று எனது தந்தை இருந்தார்.  

 எனக்கு நேர்ந்த துயரத்திற்கு எதிராக போராடும் துணிச்சல் அப்போது இல்லை .  பதினைந்து வயதில் தான் அந்த துணிச்சல் எல்லாம் வந்தது.  என் தந்தை பொறுப்பில்லாத தந்தையாக இருந்தார்.   எனது 16 வயதில் அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருந்தார்.

 இதுகுறித்து அண்ணாமலை,  ‘’அக்கா உங்களுக்கு அதிக சக்தி இருக்கிறது.  நீங்கள்  சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல.   அந்த குழந்தைப் பருவ அதிர்ச்சியில் மனம் சிசைந்து போகாமல்,  அதிலிருந்து மீண்டு வந்து  இன்று நீங்கள் இருக்கும் நிலையை அடைவது எளிதல்ல. நீங்கள் ஒரு உத்வேகம்’’என்று நெகிழ்ந்திருக்கிறார்.