கேலோ இந்தியா போட்டி நிறைவு - தமிழ்நாடு 2 ஆம் இடம்

 
கேலோ இந்தியா

சென்னை, திருச்சி உள்பட 4 நகரங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்தன.

அடிப்படை விளையாட்டுகளையும், மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தையும் ஊக்குவிக்க 'கேலோ இந்தியா' (விளையாடு இந்தியா) விளையாட்டு போட்டிகளை கடந்த 2017-ல் பிரதமர் நரேந்திர மோடி துவக்கினார்.   2023-ம் ஆண்டுக்கான 6-வது 'கேலோ இந்தியா' போட்டிகளை, ஜனவரி 19-ம் தேதி சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்று வரை நடக்கும் இப்போட்டிகளில், 5,600 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். சென்னை மட்டுமல்லாது கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் இப்போ போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்த 6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று நிறைவடைந்தன. இதில் 97 பதக்கங்களை வென்று முதன்முறையாக 2வது இடம் பிடித்து தமிழ்நாடு அணி சாதனை படைத்துள்ளது. 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது.