தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வந்த காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Feb 22, 2026, 13:21 IST1771746671590
சென்னை அண்ணா அறிவாலய வாசலில் காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலய வாசலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது IUML தேசியத் தலைவர் காதர் மொய்தீன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை உடன் இருந்த நிர்வாகிகள் தூக்கி சென்று முதலுதவி அளித்தனர்.

