கேஜிஎஃப் விக்கி கைது!!
May 4, 2024, 09:42 IST1714795924926
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது துணிக்கடையில் பணிபுரிந்த ஊழியர் ₹1 லட்சம் கையாடல் செய்து தலைமறைவாகி, மீண்டும் அவர் வேலை கேட்டு வந்தபோது விக்கி அடியாள் வைத்து இரும்பு ராடால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த ஊழியர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய விக்கியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் விக்கி சேலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அடிக்கடி குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் 7 மாதங்களுக்கு முன்பே பாஜகவில் இருந்து இவர் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.