மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக முக்கிய புள்ளிகள்

 
s

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருப்பூர் மேற்கு மாவட்டம், வெள்ளக்கோவில் நகரம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வெள்ளக்கோவில் நகர்மன்ற உறுப்பினரும் – நகர துணைச் செயலாளருமான வைகை கே.மணி மற்றும் நகர்மன்ற உறுப்பினரும்  தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரும்  –  11வது வார்டு செயலாளருமான  சிட்டி ஜி.பிரபு ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட  வெள்ளக்கோவில் வார்டு அ.தி.மு.க.  நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில்,  இன்று (14-02-2025) மாலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,  திருப்பூர் மேற்கு மாவட்டம், வெள்ளக்கோவில் நகரம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெள்ளக்கோவில் நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருபவரும் - நகர துணைச் செயலாளருமான வைகை கே.மணி மற்றும் நகர்மன்ற உறுப்பினரும் - தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரும் - 11வது வார்டு செயலாளருமான  சிட்டி ஜி.பிரபு ஆகியோர் தலைமையில் வெள்ளக்கோவில் நகர அ.தி.மு.க. நிர்வாகிகளான 13வது வார்டு செயலாளர் ஆனூர் ஏ.மணி, நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் என்.சிவக்குமார், 13வது வார்டு அவைத்தலைவர் கே.தேவராஜ், 12வது வார்டு பொறுப்பாளர் ஏ.சரவணன், 13வது வார்டு பொறுப்பாளர் எம்.சுரேஷ், 13வது வார்டு துணைச் செயலாளர் வி.எஸ்.சண்முகம், 12வது வார்டு கிளைச் செயலாளர் எஸ்.சசிகுமார், 12வது வார்டு இளைஞர் பாசறை செயலாளர் கே.ராஜா, 11வது வார்டு இளைஞர் பாசறை தலைவர் ஆர்.ராகுல், 11வது வார்டு அவைத்தலைவர் ஏ.ஆறுமுகம், எம்.ஜி.ஆர்.மன்ற பொறுப்பாளர் எம்.வடிவேல், 9வது வார்டு செயலாளர் மணி மற்றம் மூலனூர் ஒன்றியம், தூரம்பாடி ஒன்றிய பிரதிநிதி  செல்லமுத்து, கட்டிட கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குநர் எஸ்.மோகன்ராஜ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது  கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு,  துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.பி.,  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  திருப்பூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.