விஷச்சாராய வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது

 
tn

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து இதுவரை 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார் குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை ,பேரம்பாக்கம் கிராமங்களில் விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்டு ,அதை பலர் வாங்கி குடித்துள்ளனர், இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 

tn

ஓதியூரை சேர்ந்த சாராய வியாபாரி அமரன்  என்பவர் சாராயத்தை விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்த நிலையில்,  அவர் கைது செய்யப்பட்டு  அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  அதே நேரத்தில் பாண்டிச்சேரி ஏழுமலை என்பவர் இடமிருந்து முத்து என்பவர் சாராயத்தை வாங்கி அமரனுக்கு விற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சித்தாமூர் ,பெருங்கரணை மற்றும் பேரம்பாக்கத்தில் விஷ சாராயம் விற்பனை செய்த அமாவாசை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் விசாரணையில் பாண்டிச்சேரி ஏழுமலை தான் ஓதியூரை சேர்ந்த வேலு அவர் தம்பி சந்திரன் ஆகியோருக்கு விஷ சாராயத்தை விற்றது தெரியவந்தது.  இவர்களிடமிருந்து தான் அமாவாசை விஷ சாராயத்தை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.

death

இந்நிலையில் செங்கல்பட்டு அருகே விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய நபர் ஏழுமலை கைது செய்யப்பட்டுள்ளார். விஷ சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த நிலையில் ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.