ரேஷன் கடையில் கழிவு நீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம்

 
ரேஷன் கடையில் கழிவு நீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம் 

வடமலைப்பட்டி ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்பட்ட மண்ணெண்ணெயில் பாதிக்குப் பாதி தண்ணீர் கலந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 


தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வடமலைப்பட்டி கிராமத்து நியாயவிலைக் கடையில், கழிவுநீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து தென்காசி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் நரசிம்மன் கூறுகையில், ‘இப்புகார் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது; நியாயவிலைக் கடை ஊழியர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவுற்றதும், இதில் தொடர்புடைய நபர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.