கேரளாவில் இன்று முதல் கும்பமேளா
Jan 18, 2026, 11:29 IST1768715953182
250 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த கும்பமேளா இன்று முதல் கேரளாவில், மலப்புரத்தில் உள்ள திருநாவாய நவ முகுந்தா ஆலயத்தில் தொடங்குகிறது.

நவ முகுந்தா ஆலயம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் பாடிய ஸ்தலம். பரதபுழா நதிக்கரையில் நடக்கவிருக்கும் கும்பமேளா ஜனவரி 18 முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. 250 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த நிகழ்வு பல போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது. கேரளா மாநில அரசே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தாலும் பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லை. செய்திகளும் இல்லை. பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜைனி, நாசிக் போன்ற இடங்களில் நடக்கும் கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் மலப்புரம் செல்லலாம்.


