'ஆபரேஷன் டூஃபான்' திட்டம்- முதல்வர் விஜய்யை தேடி வந்த கேளர அமைச்சர்

 
அச்

எல்லைகளில் போதைபொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பான 'ஆபரேஷன் டூஃபான்' திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் - கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா ஆலோசனை நடத்தினர்.


கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜயைச் சந்திப்பதற்காக புதன்கிழமையன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். கேரள அரசு முன்னெடுத்துள்ள போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையான 'ஆபரேஷன் டூஃபான்' (Operation Toofan) குறித்து அவர் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, “விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அரசு, வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கேரள அரசு `Toofan' என்ற ஆபரேஷனை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பில் தென்னிந்திய மாநிலங்கள் இணைந்து செயல்படுவது குறித்து முதல்வர் விஜயிடம் பேசினேன்.. கேரளத்தின் போதைப்பொருள் தடுப்பு தூதராக மோகன்லால் உள்ளார். தமிழகத்தின் தூதராக CM விஜய் இருக்கிறார். இருவரும் இணைந்து `ஜில்லா’ என்ற ஒரு திரைப்படத்தில் கூட ஒன்றாக நடித்துள்ளார்கள். எல்லை மாவட்டங்களில் போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க உதவி கேட்டோம். ஆப்ரேசன் டூஃபான் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார். போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் விஜயை கேரளாவிற்கு அழைத்துள்ளோம். மோகன் லால் - விஜய் இணைந்து போதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பொருள் ஒழிப்பில் கேரளம் அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட தயார்” என்றார்.