#BREAKING கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் ஆட்சி

 
rahul

கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பதாக ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. 

கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பதாக ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 78 முதல் 90 இடங்களை பிடிப்பார்கள் என்றும் இடதுசாரிகள் 49 முதல் 62 இடங்களை பிடிப்பார்கள் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகபட்ச மூன்று இடங்களை பிடிப்பார்கள் என்றும்  கணித்துள்ளது. இதேபோல் P MARQ நிறுவன கருத்துக்கணிப்பின்படி, கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 71 தல் 90 இடங்களை பிடிப்பார்கள் என்றும் இடதுசாரிகள் 49 முதல் 79 இடங்களை பிடிப்பார்கள் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகபட்ச 1- 4 இடங்களை பிடிப்பார்கள் என்றும்  கணித்துள்ளது. JVC நிறுவனத்தின் கூற்றுப்படி, காங்கிரஸ் கூட்டணி 72 முதல் 84 இடங்களையும், இடதுசாரிகள் 52-61 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி அதிகபட்ச 3-7 இடங்களையும் பிடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Peoples Pulse கருத்துக்கணிப்பின்படி, இடதுசாரிகள் 60-65, காங்கிரஸ் 70-75, பாஜக 3-5 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் NDTV கருத்துக்கணிப்பின்படி, இடதுசாரிகள் 58-68,  காங்கிரஸ் 70-80, பாஜக 0 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. INDIA TODAY கருத்துக்கணிப்பின்படி, இடதுசாரிகள் 49-62,  காங்கிரஸ் 78-90, பாஜக 0-3 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.