கனிம வள தடையால் அதிர்ச்சியில் உறைந்த கேரளா
தமிழகத்தில் இருந்து பிற மாநிலனஙகளுக்கு கனிமவளங்களை ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு கேரள முதல்வர் சதீசன் கடிதம் எழுதியுள்ளார்.
மலைகளின் பிரதேசமான கேரள மாநிலத்திற்கு கனிமவளப் பொருட்களை கொண்டுசெல்ல தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து தான் 90% கட்டுமான பணிகளுக்கு கனிமவள கட்டுமான பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் கேரளாவில் கட்டுமான பணிகள் முழுவதும் முடங்கிப் போயுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் இருந்து மீண்டும் கனிம வள பொருள்களை கொண்டு செல்ல அனுமதிக்க கேரளா சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இங்கு கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதாலேயே தமிழக அரசு தடை விதித்துள்ளது.
கட்டுமான கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, மறுபரிசீலனை செய்ய வேண்டுமென முதலமைச்சர் விஜய்க்கு கேரள முதல்வர் சதீசன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கேரளாவில் நடைபெற்றுவரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு திட்ட பணிகளுக்கு தேவையான ஜல்லிக்கற்களை தமிழகத்திலிருந்து தடையின்றி கொண்டு செல்ல அனுமதிக்குமாறு கேரள முதலமைச்சர் சதீசன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் புதிய போக்குவரத்து விதிகளால் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் கட்டுமான கற்கள் குறைந்துள்ளதால் பணிகள் முடங்கியுள்ளதாவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

