கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயரம் : கேரள முதல்வர் இரங்கல்..!
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்டநெரிசலில் ஏற்பட்ட துயரத்தில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவாகவும், முழுமையாகவும் குணமடைய விரும்புகிறேன்.
இந்த துயரமான நேரத்தில் கேரளா, தமிழக மக்களுடன் நிற்கும் - கேரள முதல்வர் பினராயி விஜயன்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்து அறிந்துகொள்ள தொடர்பு எண்களை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள்: 04324 256306, வாட்ஸ் அப் எண்: 7010806322.
Deeply saddened by the tragic stampede that occurred in Karur, Tamil Nadu. Heartfelt condolences to the families who lost their loved ones. Wishing a speedy and complete recovery to all those injured. Kerala stands with the people of Tamil Nadu in this hour of grief.
— Pinarayi Vijayan (@pinarayivijayan) September 27, 2025

