இன்று குஜராத்தில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா ரோடு ஷோ..!

 
1

டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று அவர் குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். 

அம்மாநிலத்தில் பரூச் மற்றும் பவ்னாநகர் ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இந்த இரண்டு வேட்பாளர்களையும் ஆதரித்து அவர் ரோடு ஷோ நடத்துகிறார். 

டெல்லியில் உள்ள கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி மாநிலங்களவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து சுனிதா கெஜ்ரிவால் ஏற்கனவே ரோடு ஷோ மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி ராம்லீலா ஜந்தர் மந்தரில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மாபெரும் கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.