கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு..!
டெல்லியில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை 28-ந்தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.அமலாக்கத்துறை காவல் முடிவடைவதை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.அந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் மேலும் 4 நாட்களுக்கு கெஜ்ரிவாலின் காவலை நீட்டிப்பதாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி அமலாக்கத்துறையின் காவலில் கெஜ்ரிவால் இருப்பார்.