கீழக்கரை ஜல்லிக்கட்டு - ஆன்லைன் முன்பதிவு நிறைவு!!

 
jalli

கீழக்கரை ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்தது.

jalliமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழக்கரை கிராமத்தில்  66 ஏக்கர் பரப்பளவில் சுமார் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்திலான பிராமண்ட ஜல்லிக்கட்டு கலையரங்கம் கட்டப்பட்டு கலையரங்கப் பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. ஜல்லிகட்டு கலையரங்கம் தமிழக முதல்வரால் இம்மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த ஜல்லிகட்டு கலையரங்கத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு கலையரங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. திறப்புவிழாவையொட்டி சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டியும் அரங்கேற உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் கீழக்கரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. அலங்காநல்லூர் கீழக்கரையில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை 24ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளார்; ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியிருந்தது.