பாஜக ஒரு மூழ்கும் கப்பல்... கரை சேர முடியாது- பாலகிருஷ்ணன்

 
ச்

பாஜக ஒரு மூழ்கும் கப்பல், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அவர்களும் சேர்ந்து மூழ்குகின்ற நிலைமை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கே பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.

Image

மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் உரையாற்றிய மத்திய குழு உறுப்பினர் கே பாலகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூகத்தினருக்கு 3% இடஒதுக்கீடு பெற்றுத் தருவதில் எங்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டிற்குள், எங்கள் கட்சி எடுத்த முயற்சிகளின் காரணமாக இந்த சமூகம் இப்போது 3% இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போதும், இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்தான். 

தொகுதி மறுவரையறை, மொழி திணிப்பு மாநில உரிமையை பறிப்பு போன்ற தாக்குதலை எதிர்த்து தமிழக மக்கள் போராடி வருகிறார்கள். பாஜக எத்தனை வேஷம் போட்டாலும் கடந்த தேர்தல்களில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியாவில் பாஜகவை 100 சதவீதம் வீழ்த்திய மாநிலம் தமிழ்நாடு. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக பிற கட்சிகளை மிரட்டி  கூட்டணிக்கு அழைப்பதாக செய்தி வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி  முகாந்திரம் போல தான் செய்திகள் வருகிறது. பாஜக ஒரு மூழ்கும் கப்பலாக தான் இருக்கும். மூழ்கின்ற கப்பல் கரை சேர முடியாது.பாஜக வுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அவர்களுடன் சேர்ந்து மூழ்குகின்ற நிலைமை ஏற்படும்” என்றார்.