இதுவரை இங்கு தான் மழைப்பொழிவு அதிகம் - வெளியானது மழை டேட்டா!

 
மழைப்பொழிவு

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. இன்று தான் மழை தீவிரமாகும் என ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் நேற்றே அதற்கான அறிகுறிகள் தென்பட்டுவிட்டன. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதூ.

மழை: தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | leave  to Thuthukudi

இச்சூழலில் இதுவரை தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதியில் மழைப்பொழிவு அதிகம் பதிவாகி உள்ளது என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில், "தமிழ்நாட்டில் இதுவரை 15 இடங்களில் அதி கனமழை முதல் மிக கனமழை பதிவாகியுள்ளது. மூன்று இடங்களில் அதி கனமழையும், 12 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தான் 31 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

மழை வரப்போகுதா..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தூத்துக்குடியில் 27 செ.மீ. மழையும், திருச்செந்தூரில் 23 செ.மீ. மழையும், நாகப்பட்டினத்தில் 19 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 18 செ.மீ., குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ., வைப்பாற்றில் 15 செ.மீ. காரைக்கால் பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 1ஆம் தேதி வரை கனமழை கொட்டித்தீர்க்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்திருந்தது கவனிக்கத்தக்கது.