களைகட்டிய காவியா - அனிருத் வரவேற்பு- தனுஷ், திரிஷா மிஸ்ஸிங்

 
s

காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் குவிந்த பிரபலங்களால் ITC கிராண்ட் சோழாவே ஸ்தம்பித்தது. 

Image

கிரீஸ் நாட்டில் கடந்த நவம்பர் 11-ம் தேதி மிகவும் எளிமையாகவும் அதே நேரம் மிகவும் நெகிழ்ச்சியாகவும் நடந்த காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமணத்தை தொடர்ந்து இன்று நவம்பர் 21-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. சென்னை ITC கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த இந்த வரவேற்பு விழாவில் சினிமா, அரசியல், தொழில், கிரிக்கெட் என அனைத்து துறைகளை சேர்ந்த பிரபலங்களும் குவிந்து மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள். இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணமக்கள் காவியாவும் அனிருத்தும் இந்த வரவேற்பு விழாவில் கருப்பு மற்றும் சிவப்பு நிற உடையில் ராயல் லுக்கில் வந்து அனைவரையும் கவர்ந்தார்கள். காவியா மாறன் சிவப்பு நிற பிளாரல் லேஸ் உடையிலும் அனிருத் ஆழ்ந்த மெரூன் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட பந்த்கலா ஜாக்கெட் மற்றும் கருப்பு நிற பேண்ட்டிலும் வந்திருந்தார்கள். இவர்கள் இருவரும் கைகோர்த்து வரவேற்பு மேடைக்கு வந்த போது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

Image

இந்த வரவேற்பு விழாவின் சிறப்பே வந்திருந்த விருந்தினர்கள் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது மனைவி நம்ரதா மற்றும் மகள் சித்தாராவுடன் வந்திருந்தார். நடிகர்கள் சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரி, இயக்குநர் அட்லி தனது மனைவி பிரியாவுடன் வந்திருந்தார். கிரிக்கெட் உலகில் இருந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், கேன் வில்லியம்சன், டேனியல் வெட்டோரி, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்கள். துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு முதல்வர் விஜய், தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த், கேரள மாநில முதல்வர் சதீசன், முன்னாள் முதல்வர்கள் மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் வந்தனர். அரசியல் தலைவர்களில் தி.மு.க எம்.பி கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தி.மு.க எம்.பி ஆ.ராசா உள்ளிட்ட பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

நேரில் வர முடியாத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடிதம் மூலம் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். காவியாவும் அனிருத்தும் ஒருவருக்கொருவர் பலம், நட்பு, அன்பை வழங்கி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று சோனியா காந்தி தனது கடிதத்தில் கூறியிருந்தார். பிரதமர் மோடியும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்று வாழ்த்தியிருந்தார்.ஆனால் இந்த வரவேற்பு விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்கவில்லை. அனிருத்தின் சினிமா வருகைக்கு காரணமாக இருந்த தனுஷ் பங்கேற்காததால் அவர்கள் இருவருக்கும் மோதல் இருப்பதாக கூறப்படும் செய்தி உண்மை என்பது உண்மையாகியுள்ளது. அதேபோல் நடிகை திரிஷாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 

Image

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா வெறும் வரவேற்பு விழா இல்லை, சென்னையில் நடந்த ஒரு மினி இந்தியா கொண்டாட்டம். இசையும், சினிமாவும், அரசியலும், கிரிக்கெட்டும் ஒன்று சேர்ந்த அந்த மாலை நேரம் மணமக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.