அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான கவிதா.. கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்..

 
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான கவிதா..  கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்..

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

டெல்லி அரசு கொண்டு வந்த மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு மார்ச் 17ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த முறைகேட்டில் விஆர்எஸ் கட்சியின் மேல் சபை உறுப்பினரும்,  தெலங்கானா  முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.   இது தொடர்பான  விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

கவிதா

பெண்களுக்கான 33 சதவிகித இட  ஒதுக்கீட்டை பட்ஜெட்டில் நிறைவேற்றக்கோரி நேற்று  டெல்லியில் கவிதா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.  அதனால் விசாரணையை ஒத்தி வைக்குமாறு கவிதா கோரிக்கை வைத்ததை அடுத்து,  இன்று அவர் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதனால் அந்த அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அவரிடம் தொடர்ந்து  விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக பேட்டி அளித்த கவிதா சந்திர சேகர ராவ், விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறினார்.  தங்கள் கட்சியினரை பாஜக அரசு தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.