' பெரியாரை அவமதிக்கிறவர்களுக்கும் பெரியார்தான் ’ - கவிஞர் வைரமுத்து ..

 
இந்தியாவில் சுனாமி! ஆனால் அதில் தமிழகம் சிக்கவில்லை- வைரமுத்து

பெரியார் சிலைக்கு செருப்பு அணிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து, தனது பாணியில் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் பகுத்தறிவு வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு, நேற்று  மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடியை தூவியும் அவமரியாதை செய்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர்  ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பெரியார் சிலை அவமதிப்பு

பெரியார் சிலை  அவமதிப்பு குறித்து 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனையடுத்து அந்த நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.  பெரியார் சிலை அவமதிப்புக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சாத்தான்குளம் மரணம்… நாம் வாழ்வது பிரிட்டிஷ் இந்தியாவிலா… சுதந்திர இந்தியாவிலா? – கவிஞர் வைரமுத்து உருக்கம்

அந்தவகையில் கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதில்,

“இப்படி ஓர்
எதிர்ப்பு வடிவத்தைக்
கற்றுக் கொடுத்தவரே
பெரியார்தான்

பெரியாரை
அவமதிக்கிறவர்களுக்கும்
பெரியார்தான் ஆசான்

"வாழ்க வசவாளர்கள்"
என்றார் அண்ணா

"சிறப்புறுக செருப்பாளர்கள்"
என்போம் நாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.