கதிர் ஆனந்தை மீண்டும் வேலூரில் களமிறக்கும் திமுக!

 
Kathir Anand

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கதிர் ஆனந்துக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவை பொறுத்தவரையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளை தவிற மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடத்தி வருகிறது. இதேபோல் வேலூர் தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணலில், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் கலந்துகொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நிறைய அறிவுரைகள் வழங்கியுள்ளதக கூறப்படுகிறது. அதாவது இந்த முறையும் கண்டிப்பாக வேலூரில் வெற்றி பெற வேண்டும். பாஜகவினர் கடும் போட்டி அளிப்பார்கள் ஆகையால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். 

dmk

அப்போது கதிர் ஆனந்தும் கண்டிப்பாக இந்த முறையும் வெற்றி பெற்று விடலாம் என கூறியுள்ளார். இதனிடையே கடந்த தேர்தலில் கதிர் ஆனந்தை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஏசி சண்முகம் இந்த முறையும் அவரை எதிர்த்து போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி சார்பில் அவர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை இருவருக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், கதிர் ஆனந்த் 8141  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் இந்த முறையும் இருவரும் வேலூர் தொகுதியில் போட்டியிட்டால் கடும் போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.