ஊழல் நடந்தால் தட்டி கேட்பேன் எனக் கூறும் விஜய் ஜனநாயகம் பட விவகாரத்தை பேசாதது ஏன்?- கஸ்தூரி

 
kasthuri kasthuri

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 77வது குடியரசு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக நிர்வாகியும் திரைப்பட நடிகையுமான கஸ்தூரி கலந்து கொண்டார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, “நடிகர் விஜய் மாநாட்டில் மட்டுமே பேசுகிறாரே, தவிர மற்ற நேரத்தில் பேசுவதில்லை. கடந்த வருடம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. ஆனால் எந்த போராட்டத்திலும் விஜய் கலந்து கொள்ளவில்லை.  ஜனநாயகம் திரைப்பட விவகாரத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பேசினார்களே தவிர இதுவரை நடிகர் விஜய் அது குறித்து ஏன் பேசவில்லை? ஊழல் நடந்தால் தட்டி கேட்பேன் எனக் கூறும் விஜய் ஜனநாயகம் திரைப்படத்தின் விவகாரத்தை பேசாதது ஏன்? என மக்கள் என்னை கேட்க சொன்னதாக கேட்கிறேன்” என தெரிவித்தார்.