ஐயா அமைச்சரே! இது தான் உங்க டக்கா?விஜய் கிண்டல்
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் மாவட்டம் மாவட்டமாக பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், நாமக்கல்லில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக, நாமக்கல் வந்த அவரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்றனர். சாலைகளில் தொண்டர்கள் குவிந்ததால், அவர் பிரசார இடத்திற்கு செல்ல 6 மணிநேரம் ஆனது. அதன்பிறகு, அவர் சுமார் 15 நிமிடம் உரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து கரூர் அடுத்த வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்த அதே இடத்தில் விஜய் பரப்புரை செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
கரூரைப் பற்றி பேச நிறைய விஷயங்கள் உண்டு.
இந்தியாவிலேயே கரூர் என்று சொன்னால் ஒரே ஒரு பேர் தான் பிரபலமாகியுள்ளது. அதற்கு யார் காரணம் என்பது குறித்து உங்களுக்கே தெரியுமே. கரூரில் பேரீச்சம்பழத்தை வளர்க்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின்படி பேரீச்சை வளர்க்க நிதி உதவி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள். செய்தார்களா? பேரீச்சை விதையாவது கண்ணில் காட்டினார்களா? துபாய் குறுக்குச் சந்து கதை தான்.
கரூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 488-வது வாக்குறுதியாக கொடுத்தார்கள். ஆட்சியே முடிய போகும் இந்த நேரத்தில் ஒன்றிய அமைச்சரிடம் நம் அமைச்சர் கோரிக்கை வைக்கிறார். ஐயா அமைச்சரே! இது தான் உங்க டக்கா?”
தொடர்ந்து பேசிய விஜய், “இங்கே விமான நிலையம் அமைத்தால் ஜவுளி தொழில் வளமாகும் என்பது உண்மை. அதை பரந்தூர் விமான நிலைய பிரச்சினை மாதிரி ஆக்கிவிட கூடாது. கரூரின் தீராத தலைவலி மணல் கொள்ளை. சட்டவிரோத கல் குவாரிகள் கரூரை அழித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் யாரு சி.எம்.சார்?.. 11 மணிக்கு பதவி ஏற்றுவிட்டால் 11.05 மணல் கொள்ளை அடிக்கலாம் என வெளிப்படையாக சொன்னவர்கள் தானே உங்கள் ஆட்கள்.
இங்கு இருக்கும் பஞ்சப்பட்டி ஏரி பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. நம் ஆட்சி வந்தால் பஞ்சப்பட்டி ஏரிக்கு உயிர் வரும். கரூரின் முக்கியமான பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் ஒருவரை பேசாமல் விட்டால் நன்றாக இருக்குமா.. கரூருக்கு அமைச்சராக ஒருவர் இருந்தாரே.. ஒரு குளு தருகிறேன்.. ‘பாட்டிலுக்கு 10 ரூபாய்... பாட்டிலுக்கு 10 ரூபாய்’
கரூரில் ‘முப்பெரும் விழா’வில் மாஜி மந்திரி குறித்து உச்சி முகர்ந்து கூறினார். இதே முதல்வர் எதிர்கட்சியாக இருந்தபோது, கரூர் வரும்போது, மாஜி மந்திரி குறித்து என்னவெல்லாம் சொன்னார் என்பதை யூடியூப் பார்த்தால் தெரியும்.
இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாறும். காட்சி மாறும். அதிகாரம் கை மாறும். மனசாட்சி உள்ள மக்களாட்சி மலரும்” என்றார்.

